Wednesday 5 February 2014

சுதந்திரம்



                            சுதந்திரம்
அயலானிடம் வாங்கி முயலானிடம் கொடுத்தோம்
பாவியிடம் வாங்கி பாதகநிடத்தில் கொடுத்தோம்
போனால் போகட்டும் என்றால்
வியர்வை சிந்தி வந்ததல்ல,
இரத்தம் சிந்தி வந்தது
நம்மில் பாதியை இழந்து பெற்றோம்,
மீதியை கொண்டு வென்றோம்
இரவில் விடுதலை வாங்கினோம்,
அதனால் தானோ இன்னும் விடியவில்லை
இது ஏனோ தெரியவில்லை
யாருக்கும் இன்றுவரை புரியவில்லை
இந்த நாட்டை காக்க ஓர் நாதியில்லை
இந்த கொடுமைக்கில்லை ஒரு எல்லை
நாமும் இந்நாட்டின் ஒரு பிள்ளை
அதை காக்க எடுப்போம் புது வில்லை
அன்பு தான் நமது அம்பு
அதையே அனுதினமும் நம்பு
தனியொரு மனிதன் தன்னந்தனியில்
தனியொரு வீதியில் தைரியமாய் செல்லும்போது
அல்லும் பகலும் அவனை பகைக்க வல்லவன்
எவரும் இல்லையெனில் அதுதான் முழுச் சுதந்திரம்
அன்பு, நம் நாட்டையும் வீட்டையும் காக்கவல்ல ஒரு மந்திரம்
நம்மை காக்க எடுப்போம் புது சபதம்
இனி நாமே எழுதுவோம் சுய சரிதம் ........ !


No comments:

Post a Comment